கட்டிட பணியில் ஈடுபட்ட பெண் கைது


கட்டிட பணியில் ஈடுபட்ட பெண் கைது
x
தினத்தந்தி 22 Oct 2022 1:15 AM IST (Updated: 22 Oct 2022 1:15 AM IST)
t-max-icont-min-icon

ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை, பணம் திருட்டு போனது தொடர்பாக கட்டிட பணியில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டார்.

சேலம்

கன்னங்குறிச்சி:-

ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை, பணம் திருட்டு போனது தொடர்பாக கட்டிட பணியில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டார்.

ரெயில்வே இன்ஸ்பெக்டர்

சேலம் கன்னங்குறிச்சி சாய்பாபா நகரில் வசிப்பவர் சண்முகம். ஜோலார்பேட்டையில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி வளர்மதி, தன்னுடைய மகனை பள்ளியில் இருந்து அழைத்து வர சென்றார்.

அப்போது மர்மநபர் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ஆகியவை திருட்டு போனது. இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது பெண் ஒருவர் சண்முகம் வீட்டுக்குள் சென்று வருவது தெரிய வந்தது. அந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர்.

கட்டிட பணியில்...

விசாரணையில், நரசோதிப்பட்டியை சேர்ந்த தமிழ்ச்செல்வி (35) என்பவர் அந்த பகுதியில் புதிய வீடு கட்டிட பணியில் ஈடுபட்டு இருந்ததும், அந்த பெண் தான் திருடியது தெரிய வந்தது. அதாவது, கட்டட பணியின் போது வளர்மதி வீட்டு முன்பு அமர்ந்து சாப்பிடுவதும், அவரிடம் தண்ணீர் வாங்கி குடிப்பதும் வழக்கம். அப்போது வளர்மதியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வளர்மதி வீட்டு சாவி தொலைந்து விட்டது. உடனே அவர், மாற்று சாவியை பயன்படுத்தி வந்தார். அந்த சாவியை தமிழ்செல்விதான் ஏற்கனவே திருடி வைத்திருந்ததும், அந்த சாவியை கொண்டு இன்ஸ்பெக்டர் வீட்டை திறந்து பணம், நகையை திருடி சென்றதும் தெரிய வந்தது. உடனே போலீசார் தமிழ்ச்செல்வியை கைது செய்தனர். அவரிடம் இருந்து நகை, பணத்தை மீட்டனர்.


Next Story