தண்டையார்பேட்டையில் நன்னடத்தை விதியை மீறிய பெண்ணுக்கு 305 நாட்கள் சிறை


தண்டையார்பேட்டையில் நன்னடத்தை விதியை மீறிய பெண்ணுக்கு 305 நாட்கள் சிறை
x

தண்டையார்பேட்டையில் நன்னடத்தை விதியை மீறிய பெண்ணுக்கு 305 நாட்கள் சிறை தண்டனை வழங்கி துணை கமிஷனர் பவுன்குமார் ரெட்டி உத்தரவிட்டார்.

சென்னை

சென்னை தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் பிரேமா (வயது 39). இவர் மீது கள்ளச்சந்தையில் மது பாட்டில்கள் விற்ற வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் பவுன்குமார் ரெட்டி முன்னிலையில் போலீசார் பிரேமாவை ஆஜர்படுத்தினர். அப்போது அவர், இனி மதுபானம் விற்க மாட்டேன் திருந்தி வாழ்வேன் என்று கூறி நன்னடத்தைப் பத்திரத்தில் எழுதி கொடுத்து விட்டு சென்றார். இந்த நிலையில், கடந்த 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று பிரேமா தனது வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் பிரேமா வீட்டை சோதனை செய்த நிலையில், மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற போது கையும் களவுமாக பிட்பட்டார். இதையடுத்து அவரிடம் இருந்து 200 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து பிரேமாவை கைது செய்து வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் பவுன்குமார் ரெட்டி முன்னிலையில் நிறுத்தினர். நன்னடத்தைப் பிணையை மீறிய குற்றத்திற்காக வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் பிரேமாவுக்கு 305 நாட்கள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து, பிரேமாவை போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.


Next Story