அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் சாவு


அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் சாவு
x

வாடிப்பட்டியில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.

மதுரை

வாடிப்பட்டி,

வாடிப்பட்டி அருகே மேட்டுநீரேத்தான் கோனார் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி பிச்சையம்மாள் (வயது 57). இவர் தனது மகன் கார்த்திக் (39) உடன் மேட்டுநீரேத்தானிலிருந்து வாடிப்பட்டிக்கு மொபட்டில் வந்தனர். வாடிப்பட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு வந்தபோது பிச்சையம்மாள் திடீரென்று மொபட்டில் இருந்து கீழே விழுந்தார்.அப்போது மதுரையில் இருந்து தேனி நோக்கி சென்ற அரசு பஸ்சின் சக்கரம் பிச்சையம்மாள் மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் வழக்குபதிவு செய்து அரசு பஸ் டிரைவர் பெரியகுளம் சல்வார்பட்டி மணிமாறன் (51) என்பவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.


Related Tags :
Next Story