தலையணையால் அமுக்கி பெண் கொலை; 18 பவுன் நகைகள் கொள்ளை


தலையணையால் அமுக்கி பெண் கொலை;  18 பவுன் நகைகள் கொள்ளை
x

தலையணையால் அமுக்கி பெண்ணை கொன்று, 18 பவுன் நகைகளை கொள்ளையடித்த கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

தலையணையால் அமுக்கி பெண்ணை கொன்று, 18 பவுன் நகைகளை கொள்ளையடித்த கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

பெண் கொலை

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள திருவரங்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவருடைய மனைவி காந்தி (வயது 65). இவர்களுக்கு 5 மகள்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் திருமணமாகி சென்னையில் வசித்து வருகின்றனர்.

கடந்த 5 நாட்களுக்கு முன்பு காந்தியின் கணவர் முத்துசாமி சென்னை சென்றார். காந்தி மட்டும் தனியாக இருந்தார். விவசாய வேலைகளை கவனித்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு காந்திமதி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்த மர்ம மனிதர்கள், அங்கு தரையில் தூங்கி கொண்டிருந்த காந்தியின் முகத்தில் தலையணையால் அமுக்கினர். இதில் மூச்சு திணறி சம்பவ இடத்திேலயே இறந்தார்.

நகைகள் கொள்ளை

பின்னர் அவர் அணிந்திருந்த 12 பவுன் தாலிச்சங்கிலியை கழற்றி எடுத்துக்கொண்டனர். பீரோவை உடைத்து அங்கு ைவத்திருந்த 6 பவுன் வளையல்களையும் ெகாள்ளையடித்து விட்டு தப்பி சென்று விட்டனர்.

நேற்று காலை பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர், காந்தி வீட்டுக்கு சென்ற போது கதவு உடைக்கப்பட்டு அவர் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அறிந்ததும் கீழத்தூவல் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். காந்தியின் உடலை பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் மூலம் கொலை நடந்த வீட்டில் சோதனை செய்தனர். இச்சம்பவம் குறித்து கீழத்தூவல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண்ணை கொன்று நகைகளை கொள்ளையடித்த மர்ம கும்பலை தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story