மின்சாரம் தாக்கி பெண் பலி
வேப்பூர் அருகே எந்திரம் மூலம் பால் கறந்த போது மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.
ராமநத்தம்,
வேப்பூர் அருகே காட்டுமைலூர் கிராமத்தை சேர்ந்தவர் சாமிக்கண்ணு மனைவி கவிதா (வயது 45). இவர் நேற்று காலை தனது வீட்டில் பசு மாட்டில் எந்திரம் மூலம் பால் கறந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கவிதா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
போலீசார் விசாரணை
இது குறித்த தகவலின் பேரில் வேப்பூர் போலீசார், கவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பாிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.