மின்சாரம் தாக்கி பெண் பலி
விக்கிரமசிங்கபுரத்தில் மின்சாரம் தாக்கி பெண் பலியானார்.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் அய்யனார்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கோபால். கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி நவநீதமுருகேஸ்வரி (வயது 38). இவர் நேற்று மாலை தனது வீட்டில் உள்ள முருங்கை மரத்தில் இரும்பு கம்பியை கொண்டு முருங்கைக்காய் பறித்துள்ளார். அப்போது இரும்பு கம்பி எதிர்பாராதவிதமாக வீட்டு மாடியின் மேல் சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின்கம்பியில் பட்டது. இதனால் கம்பியின் வழியாக நவநீத முருகேஸ்வரி மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். அப்போது அவரை தொட்டதில் மகன் கார்த்திகேயன் (10) மீதும் மின்சாரம் தாக்கியதில் அவன் காயமடைந்தான். காயமடைந்த அவன் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நவநீத முருகேஸ்வரியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.