மின்சாரம் தாக்கி பெண் பலி


மின்சாரம் தாக்கி பெண் பலி
x

வாணியம்பாடியில் மின்சாரம் தாக்கி பெண் பலியானார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் ஷகீல்அஹமத். இவர் வெளிநாட்டில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி சித்தீகா பர்வீன் என்ற மனைவியும் 5 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று சித்தீகாபர்வீன் வீட்டில் உள்ள குளியலறையில் குளிக்க சென்றுள்ளார். அப்போது வெந்நீர் போடப்பட்டு இருந்த ஹீட்டரை அணைக்க முயன்றபோது அவர் மீது மின்சாரம் தாக்கியது. அவருடைய அலறல் சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் மின்சாரத்தை அணைத்து, கதவை உடைத்து மயங்கிய நிலையில் இருந்த சித்தீகா பர்வீனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறினார்.

இதையறிந்த வாணியம்பாடி டவுன் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story
  • chat