பாம்பு கடித்து பெண் சாவு
பாம்பு கடித்து பெண் சாவு
திருவாரூர்
குடவாசல்:
குடவாசல் அருகே உள்ள தேதியூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி அஞ்சம்மாள்(வயது35). நேற்று இ்வர் வயலுக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பாம்பு கடித்தது. இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நன்னிலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்்சை பலனின்றி அஞ்சம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து எரவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்துபோன அஞ்சம்மாளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
Related Tags :
Next Story