விபத்தில் பெண் பலி; கணவர்-மகள் காயம்
விபத்தில் பெண் உயிரிழந்தார். அவரது கணவர்-மகள் காயமடைந்தனர்.
பெரம்பலூர்
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தில் உள்ள கூத்தனூர் பகுதியை சேர்ந்தவர் இளம்பெருவழுதி(வயது 60). இவர், தனது மனைவி செல்வி(55), மகள் சூர்யா(22) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் திருவிளக்குறிச்சியில் நடந்த கோவில் கும்பாபிஷேகத்திற்காக சென்றுள்ளார். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது எதிரே வந்த வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே செல்வி உயிரிழந்தார். இளம்பெருவழுதியும், சூர்யாவும் காயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காகவும், செல்வியின் உடலை பிரேத பரிசோதனைக்காகவும் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story