அண்ணா சதுக்கம் அருகே போலீஸ் வாகனம் மோதி பெண் பலி


அண்ணா சதுக்கம் அருகே போலீஸ் வாகனம் மோதி பெண் பலி
x

அண்ணா சதுக்கம் அருகே போலீஸ் வாகனம் மோதி பெண் பரிதாபமாக இறந்தார்.

சென்னை

சென்னையை அடுத்த அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மேரி (வயது 57). இவர், நேற்று காலை தனது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினருடன் சென்னை மெரினா கடற்கரைக்கு சென்றார். கடற்கரையில் இருந்து அண்ணா சதுக்கம் அருகே காமராஜர் சாலையை கடந்து செல்ல முயன்றார்.

அப்போது, கலங்கரை விளக்கத்தில் இருந்து தலைமைச்செயலகம் நோக்கி வந்த காவல்துறை டெம்போ டிராவல்ஸ் வாகனம் மேரி மீது வேகமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த மேரி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

தகவலறிந்து வந்த அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் உயிரிழந்த மேரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்துக்கு காரணமான போலீஸ் வாகனத்தை ஓட்டி வந்த போலீஸ்காரர் சத்தியமூர்த்தியை கைது செய்தனர்.


Next Story