பெண் போலீசை வீடியோ எடுத்து கேலி செய்து மீம்ஸ்


பெண் போலீசை வீடியோ எடுத்து கேலி செய்து மீம்ஸ்
x

பெண் போலீசை வீடியோ எடுத்து கேலி செய்து மீம்ஸ் வெளியிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர்


விருதுநகர் மாவட்டம் சாத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வருபவர் கற்பகலட்சுமி (வயது 34). இவர் ஓ.மேட்டுப்பட்டியில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு பாதுகாப்பு பணிக்காக சென்றார். அங்கு அவர் ஊர்வலத்தில் நடந்து வந்த போது, வாலிபர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து அவரை கேலி-கிண்டல் செய்து சமூக வலைதளத்தில் மீம்ஸ் பதிவிட்டார்.

இது சமூக வலைதளத்தில் பரவியது. இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீசில் கற்பகலட்சுமி புகார் அளித்தார். அதன்ேபரில் போலீசார் விசாரணை நடத்தியதில் ஓ.மேட்டுபட்டியைச் சேர்ந்த நல்லையராஜ் (24), அவ்வாறு பதிவிட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story