பெண்ணிடம் 1½ பவுன் நகை பறிப்பு
பெண்ணிடம் 1½ பவுன் நகை பறிப்பு
கோயம்புத்தூர்
சிங்காநல்லூர்
கோவை எஸ்.ஐ.எச்.எஸ். காலனியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருடைய மனைவி சிவசங்கரி (வயது 46). ஜவுளி வியாபாரி. இவர் கடந்த 26-ந் தேதி வரதராஜபுரம் மேட்டுவிநாயகர் கோவில் அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மர்ம ஆசாமிகள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அந்த மர்ம ஆசாமிகள் திடீரென சிவசங்கரி கழுத்தில் அணிந்து இருந்த 1½ பவுன் நகையை பறித்துக்கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் தப்பினர்.
இதை பார்த்து சிவசங்கரி அதிர்ச்சியடைந்து திருடன்... திருடன்... என்று சத்தம் போட்டார். ஆனால் அதற்குள் அந்த ஆசாமிகள் தப்பிச்சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story