பெண்ணிடம் 12 பவுன் நகை பறிப்பு


பெண்ணிடம் 12 பவுன் நகை பறிப்பு
x

பண்ணப்பட்டி அருகே பெண்ணிடம் 12 பவுன் நகை பறித்த வாலிபரை போலீஸ் தேடுகிறது.

சேலம்

ஓமலூர்:-

ஓமலூர் அடுத்த பண்ணப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன், ஓய்வுபெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர். இவருடைய மனைவி சிவகாமி (வயது 62). இவர்களுக்கு ரஜினிகாந்த் என்ற மகனும், கவிதா என்ற மகளும் உள்ளனர். சிவகாமி பண்ணப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு பேன்சி ஸ்டோர் கடை வைத்துள்ளார். இவரது கடையில் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் அடையாளம் தெரியாத 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ஜெராக்ஸ் எடுக்க வேண்டும் எனக்கூறி கையில் பேப்பருடன் வந்துள்ளார்.

அப்போது சிவகாமி பேப்பரை வாங்கிய போது அவரது கழுத்தில் இருந்த 12 பவுன் தங்க சங்கிலியை பறித்து உள்ளார். பின்னர் அந்த மர்ம வாலிபர் மோட்டார் சைக்கிளில் தின்னப்பட்டியை நோக்கி தப்பிச்சென்று விட்டார். இதுகுறித்து சிவகாமி, தீவட்டிப்பட்டி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வம், பழனிசாமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் பண்ணப்பட்டி முதல் தின்னப்பட்டி வரை தார்ச்சாலையை ஒட்டி உள்ள கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story