பெண்ணிடம் 5½ பவுன் நகை பறிப்பு
முகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் 5½ பவுன் நகை பறித்து சென்றனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி மகாலிங்கபுரம் நேரு நகரை சேர்ந்தவர் மாலதி (வயது 53). இவர் நேற்று காலையில் அந்த பகுதியில் செடியில் இருந்து பூக்களை பறித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த நபர் ஒருவர் அருகில் சென்று முகவரி கேட்பது போல் நடித்து, அவரது கழுத்தில் கிடந்த நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். இதையடுத்து மாலதி சத்தம் போட்டதும் அக்கம், பக்கத்தினர் வருவதற்குள் அந்த தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மகாலிங்கபுரம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் 5½ பவுன் நகையை மர்ம நபர் பறித்து சென்றது தெரியவந்தது. இதற்கிடையில் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் செல்வது போன்றும், பின்னர் ஒரு நபர் நடந்து வந்து மூதாட்டியிடம் நகையை பறித்து செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி உள்ளன. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.