பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு

மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது பெண்ணிடம் 7 பவுன் நகை பறிக்கப்பட்டது.
பீளமேடு
கோவை சின்னியம்பாளையம் அருகே உள்ள பூபதி தெருவை சேர்ந்தவர் ஹேமலதா (வயது 42), ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் கோவை-அவினாசி சாலையில் சித்ரா சிக்னல் அருகே சென்று கொண்டு இருந்தார்.
அப்போது பின்னால் மோட்டார் சைக்களில் வந்த 2 பேர் திடீரென்று ஹேமலதா கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை பறித்துவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். இது குறித்த புகாரின்பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதுடன், தலைமறைவான 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





