பெண்ணிடம் 9¼ பவுன் நகை பறிப்பு


பெண்ணிடம் 9¼ பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 18 July 2023 12:15 AM IST (Updated: 18 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி அருகே பெண்ணிடம் 9¼ பவுன் நகை பறித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே சோண்டார்குடி கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி மனைவி ஜெயமாலினி (வயது 20). நேற்று முன்தினம் இரவு தனது குழந்தையுடன் ஜெயமாலினி வீட்டின் ஒரு அறையிலும், அவரதுமாமியார் சந்திரா வறண்டாவிலும் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் கதவை பூட்டாமல் விட்டுவிட்டதாக தெரிகிறது. இதைநோட்ட மிட்ட மர்மநபர்கள் 4 பேர் வீட்டுக்குள் புகுந்து ஜெயமாலினி கழுத்தில் கிடந்த 9¼ பவுன் நகையை பறித்து கொண்டு தப்பிச்சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story