குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தீக்குளித்து சாவு


குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தீக்குளித்து சாவு
x

குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தீக்குளித்து இறந்தார்.

திருவண்ணாமலை

ஆரணி

குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தீக்குளித்து இறந்தார்.

ஆரணியை அடுத்த துந்தரீகம் பட்டு கிராமம் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 30) இவர்களுக்கு திருமணம் ஆகி 10 வருடங்கள் ஆகிறது. குழந்தைகள் இல்லாத ஏக்கத்தில் மகேஸ்வரி இருந்து வந்தார். நேற்று பகலில் வந்தவாசியில் உள்ள கோவிலுக்கு கணவர் ராஜசேகர் சென்று இருந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மகேஸ்வரி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார்.

எரிந்த நிலையில் வீட்டில் மகேஸ்வரி இருப்பதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தெரிந்து அங்கு வந்தவர்கள் மகேஸ்வரியை மீட்டனர்.பின்னர் சிகிச்சைக்காக அவரை ஆரணி அரசு மருத்துவமணைக்கு கொண்டு வந்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story