சாராயம் விற்ற பெண் கைது
சாராயம் விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.
வேப்பந்தட்டை:
சாராயம் விற்பனை
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள காரியானூர் பகுதியில் சாராயம் விற்கப்படுவதாக பெரம்பலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையிலான போலீசார், காரியானூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காரியானூர் வடக்கு தெரு ஆலமரத்தடியில் ஒரு பெண் சாராயம் விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
பெண் கைது
இதில் அவர் காரியானூரை சேர்ந்த பவுனாம்பாள் (வயது 55) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து பாக்கெட்டுகளில் இருந்த 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பவுனாம்பாளை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.