கீழ்வேளூர் அருகே சாராயம் விற்ற பெண் கைது
சாராயம் விற்ற பெண் கைது செய்யப்படடார்.
நாகப்பட்டினம்
சிக்கல்:
கீழ்வேளூர் அருகே தெற்காலத்தூர் பகுதியில் சாராயம் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த பகுதியில் சாராயம் விற்ற ஒரு பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், நாகை பாப்பாகோவில் மதகடி தெருவை சேர்ந்த சாமித்துரை மனைவி அஞ்சம்மாள் (வயது 42) என்பது தெரியவந்தது. இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஞ்சம்மாளை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story