சாராயம் விற்ற பெண் கைது


சாராயம் விற்ற பெண் கைது
x

ஆம்பூர் அருகே சாராயம் விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர்

ஆம்பூர் அடுத்த ஈச்சம்பட்டு பகுதியில் உமராபாத் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கிரீன் குட்டை அருகே ஈச்சம்பட்டு எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த சேகர் மனைவி சித்ரா (வயது 58) என்பவர் சாராய விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.


Next Story