பெண்ணுக்கு கத்திக்குத்து


பெண்ணுக்கு கத்திக்குத்து
x

ஒரத்தநாடு அருகே பெண்ணை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்

ஒரத்தநாடு:

ஒரத்தநாட்டை அடுத்துள்ள சங்கரநாதர்குடிக்காடு ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் மனைவி இலக்கியா (வயது33). இவருக்கும் பாப்பாநாடு மடத்துவாசல் பகுதியைச் சேர்ந்த காத்தலிங்கம் என்பவரின் மகன் பாலகுமார் (30) என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 29-ந்தேதி காலை பாலகுமார் இலக்கியாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு இலக்கியாவிடம் தன்னைப் பற்றி எனது மாமியாரிடம் என்ன சொன்னாய்? என்று கேட்டுள்ளார். அப்போது இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாலகுமார் தான் வைத்திருந்த கத்தியால் இலக்கியாவை குத்தி உள்ளார். இதில் படுகாயமடைந்த இலக்கியாவை அக்கம், பக்கத்தினர் மீட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து இலக்கியா கொடுத்த புகாரின் பேரில் பாப்பாநாடு போலீசார் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாலகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story