விஷம் குடித்து பெண் தற்கொலை


விஷம் குடித்து பெண் தற்கொலை
x

ஒரத்தநாடு அருகே திருமணமான 5 மாதங்களில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

தஞ்சாவூர்

ஒரத்தநாடு;

ஒரத்தநாடு அருகே திருமணமான 5 மாதங்களில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

திருமணம்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள சில்லத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லையன். இவரது மகள் அனிதா (வயது19) இவருக்கும், கந்தர்வக்கோட்டையை அடுத்துள்ள நாயக்கர்பட்டியை சேர்ந்த மணிவேல் என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இருப்பினும் கணவன்- மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அனிதா கோபித்துக்கொண்டு சில்லத்தூரில் உள்ள தனது தாயார் வீட்டில் வசித்து வந்தார்.

விஷம் குடித்தார்

கணவரை பிரிந்து தாயார் வீட்டில் வசித்து வந்த அனிதா, சம்பவத்தன்று பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அவரை குடும்பத்தினர் மீட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வந்த அனிதா சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து அனிதாவின் தந்தை செல்லையன் கொடுத்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அனிதா ஏன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்? அவர் சாவுக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அனிதாவுக்கு திருமணம் ஆகி 5 மாதங்களே ஆவதால் தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) பழனிவேல் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story