காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை
தஞ்சையில், காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
தஞ்சாவூர்;
தஞ்சையில், காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
காதல் திருமணம்
திருச்சியை அடுத்த ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மனைவி சந்திரா. இவர்களது மகள் கற்பகம்(வயது 24). இவர் தஞ்சை சுண்ணாம்புக்காளவாய் பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவரை காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு 5 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 1½ வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ரஞ்சித்குமார் விபத்தில் இறந்து விட்டார். இதனைத்தொடர்ந்து ரஞ்சித்குமாருக்கு காப்பீட்டு பணம் வந்துள்ளது. இது தொடர்பாக, ரஞ்சித்குமாரின் குடும்பத்தினருக்கும், கற்பகத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தூக்கில் பிணம்
இந்த நிலையில் கற்பகம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாக கற்பகத்தின் தாய் சந்திரா, தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.மேலும் கற்பகத்திற்கு திருமணம் ஆகி 6½ ஆண்டுகளே ஆவதால் பணத்தகராறு அல்லது வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என தஞ்சை உதவி கலெக்டர். ரஞ்சித் விசாரணை நடத்தி வருகிறார்.