கலெக்டர் அலுவலகத்தில் பெண் தற்கொலை முயற்சி


கலெக்டர் அலுவலகத்தில் பெண் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 24 July 2023 6:45 PM GMT (Updated: 25 July 2023 12:17 PM GMT)

கலெக்டர் அலுவலகத்தில் பெண் தற்கொலை செய்ய முயற்சித்தார்

சிவகங்கை

சிவகங்கை

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டம் நடைபெற்ற போது மனு கொடுக்க வந்த 42 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் திடீரென்று தன்னுடைய பையில் வைத்திருந்த மண்எண்ணெைய உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி உடலில் தண்ணீரை ஊற்றினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிவகங்கை நகர் போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் காரைக்குடி சூடாமணிபுரத்தை சேர்ந்த விமல் (வயது 42) என்றும், கணவர் அமிர்தராஜ் வெளிநாட்டில் வேலை செய்கிறார் என்றும், தங்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர் எனவும் கூறினார். ேமலும் குடும்ப தகராறில் விமலை அவருடைய மாமியார் வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார்களாம். இதுகுறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் அவர் தீக்குளிக்க முயன்றார் என தெரியவந்தது. கலெக்டர் ஆஷாஅஜீத் அந்த பெண்ணை அழைத்து விசாரித்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.


Next Story