நகராட்சி அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி


நகராட்சி அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
x

விருத்தாசலத்தில் நகராட்சி அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் புதுப்பேட்டையை சேர்ந்தவர் ஜலால்தீன் (வயது 60). இவர் நாச்சியார்பேட்டையில் சமீபத்தில் வாங்கிய நிலத்துக்கு பட்டா மாற்றம் செய்து தரக்கோரி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனு அளித்தார். ஆனால் இதுவரைக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில், நேற்று அவரது மனைவி சல்மா (50), விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள நில அளவைத்துறைக்கு வந்து தன்னுடைய கணவர் ஜலால்தீன் இடத்திற்கு பட்டா மாற்றம் செய்து தரக்கோரி மண்எண்ணெயை தன் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

உடனே அங்கிருந்தவர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றி தடுத்து நிறுத்தினர். பின்னர், நாளை(அதாவது இன்று) பட்டா மாற்றம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிப்பேன் என்று கூறி அங்கிருந்து சென்றார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Next Story