பெண் மீது தாக்குதல்


பெண் மீது தாக்குதல்
x

செங்கிப்பட்டியில் பெண்ணை தாக்கிய உறவினர் கைது செய்யப்பட்டாா்.

தஞ்சாவூர்

வல்லம்;

தஞ்சையை அடுத்துள்ள செங்கிப்பட்டி கீழத்தெருவை சேர்ந்தவர் நடராஜன் மனைவி வசந்தி(வயது51). அதே பகுதியை சேர்ந்தவர் புகழேந்தி (24). வசந்திக்கு புகழேந்திக்கு மருமகன் ஆவார். இவர்களுக்கு இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் வசந்திக்கும், புகழேந்திக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த புகழேந்தி, வசந்தியை தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்குதலில் காயமடைந்த வசந்தியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து புகழேந்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story