நல்லம்பள்ளி அருகேகுழந்தையுடன் பெண் மாயம்


நல்லம்பள்ளி அருகேகுழந்தையுடன் பெண் மாயம்
x
தர்மபுரி

நல்லம்பள்ளி

நல்லம்பள்ளி அருகே உள்ள பெருமாள்கோவில்மேடு பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி, தச்சு தொழிலாளி. இவரது மனைவி அருணா (வயது 28). சம்பவத்தன்று இவர் தனது 2 வயது ஆண் குழந்தையுடன் வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதனால் குப்புசாமி மனைவியை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவா் அதியமான்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story