கள்ளக்காதலனுடன் பெண் திடீர் மாயம்


கள்ளக்காதலனுடன் பெண் திடீர் மாயம்
x
தினத்தந்தி 23 Dec 2022 12:15 AM IST (Updated: 23 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி அருகே கள்ளக்காதலனுடன் பெண் திடீர் மாயம் கடத்தி சென்றதாக கணவர் புகார்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே குரு பீடபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் ராஜ்(வயது 49), இவர் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக சிங்கப்பூரில் கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இவருடைய மனைவி ஜானகி என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன்(36) என்ற வாலிபருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்து கடந்த மாதம் சிங்கப்பூரிலிருந்து சொந்த ஊருக்கு வந்த ராஜ், ராதாகிருஷ்ணனை கண்டித்தார்.

இந்த நிலையில் ஜானகியும், ராதாகிருஷ்ணனும் திடீரென மாயமானார்கள். இதையடுத்து கள்ளக்குறிச்சியில் உள்ள உறவினர் வீட்டில் இருந்த தனது மனைவியை ராதாகிருஷ்ணன் கடத்தி சென்று விட்டதாக கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் ராஜ் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராதாகிருஷ்ணன், ஜானகி இருவரையும் தேடி வருகிறாா்கள்.

1 More update

Next Story