பெட்டிக்கடைகளில் சாராயம் விற்பதை தடுக்கக்கோரி பெண்கள் போராட்டம்


பெட்டிக்கடைகளில் சாராயம் விற்பதை தடுக்கக்கோரி பெண்கள் போராட்டம்
x

பெட்டிக்கடைகளில் சாராயம் விற்பதை தடுக்கக்கோரி பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே கீழ்நகர் கிராமத்தில் ஆரணி செல்லும் சாலையில் உள்ள சில பெட்டிக்கடைகளில் சாராயம் விற்பதாகவும், இதுகுறித்து போலீசில் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பெண்கள் சிலர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் கண்ணமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

1 More update

Next Story