மகளிர் உரிமை தொகை கேட்டு தாலுகா அலுவலகத்தில் குவிந்த பெண்கள்


மகளிர் உரிமை தொகை கேட்டு தாலுகா அலுவலகத்தில் குவிந்த பெண்கள்
x
தினத்தந்தி 16 Oct 2023 6:45 PM GMT (Updated: 16 Oct 2023 6:47 PM GMT)

கடையநல்லூரில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு தாலுகா அலுவலகத்தில் பெண்கள் குவிந்தனர்.

தென்காசி

தாலுகா அலுவலகத்தில் குவிந்தனர்

தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக தென்காசி மாவட்டத்தில் இருந்து 3.80 லட்சம் மகளிர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் தகுதியுள்ள மகளிருக்கு அவரவர் வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இதில் விண்ணப்பித்த பலருக்கு மகளிர் உதவித்தொகை கிடைக்கவில்லை. இதற்காக கலெக்டர், உதவி கலெக்டர், தாலுகா அலுவலகங்களில் மகளிர் உரிமை தொகை விவரம் பெறுவதற்கான தகவல் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று 2-ம் கட்டமாக மகளிர் உரிமை தொகை வந்ததை தொடர்ந்து மகளிர் உரிமைத்தொகை நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மற்றும் வங்கி கணக்கில் பணம் வராத பல பெண்கள் நேற்று அதிகாலை முதலிலே கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தில் குவிந்தனர்.

பேச்சுவார்த்தை

அப்போது உரிமைத்தொகை விண்ணப்ப நிலை குறித்து அறியும் இணையதளம் முடங்கியதால் குழப்பம் அடைந்தனர்.

ஒரே நேரத்தில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கூடியதால் அலுவலகத்தில் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன. இணையதள இணைப்பின் வேகமும் போதிய அளவு கிடைக்காதால் பெண்களுக்கு உரிய பதிலளிக்க முடியாமல் வருவாய்த்துறையினர் திணறினர். கூட்டம் கட்டுக்கடங்காததால் போலீசார் வரவழைக்கப்பட்டனர் தாசில்தார் கங்கா நேரடியாக வந்து விண்ணப்பதாரர்கள் அனைவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி திருப்பி அனுப்பினார்.


Next Story