காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியல்
நெல்லையில் சீராக குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லையில் சீராக குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடிநீர் பிரச்சினை
நெல்லை மாநகராட்சி 4-வது வார்டுக்கு உட்பட்ட பாளையங்கோட்டை திருவண்ணநாதபுரம் பொட்டல் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
அந்த பகுதியில் கடந்த சில நாட்களாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறி, அப்பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன் நேற்று பொட்டல்- கோட்டூர் சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
உடனே அந்த வார்டு கவுன்சிலர் தரப்பினர் சம்பவ இடத்துக்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடனே குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். தொடர்ந்து அப்பகுதியில் சிறிது நேரத்தில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த வழியாக சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மோட்டார் பழுது
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ''நீரேற்றும் நிலையங்களில் அடிக்கடி மின் மோட்டார் பழுதாவதால் தண்ணீர் வினியோகம் செய்ய முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். எனவே பழுதடைந்த மின்மோட்டார்களை மாற்றிவிட்டு புதிய மின்மோட்டார்கள் மூலம் சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்'' என்று தெரிவித்தனர்.