காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியல்


காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியல்
x

வள்ளியூர் அருகே சீராக குடிநீர் வழங்கக்கோரி, காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருநெல்வேலி

வள்ளியூர் (தெற்கு):

வள்ளியூர் அருகே சீராக குடிநீர் வழங்கக்கோரி, காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலைமறியல்

வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளம் பஞ்சாயத்து தேரைகுளம் கிராமத்தில் கடந்த சில நாட்களாக சீராக குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது என்று கூறி, அப்பகுதி பெண்கள் நேற்று காலையில் காலிக்குடங்களுடன் வள்ளியூர்- திருச்செந்தூர் மெயின் ரோட்டில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

உடனே தெற்கு கள்ளிகுளம் பஞ்சாயத்து தலைவர் பிரமிளா பிரைட்டன், பஞ்சாயத்து செயலாளர் சுமிலா மற்றும் வள்ளியூர் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போக்குவரத்து பாதிப்பு

இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த வழியாக சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர் அங்கு வந்த ராதாபுரம் யூனியன் ஆணையாளர் ராஜேஷ் கூறுகையில், ''கோடைக்காலம் தொடங்கியதால் ஆழ்குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. இதனால் கூடுதலாக ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து சீராக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும்'' என்று தெரிவித்தார்.


Next Story