பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான இணைய வழி குற்றங்கள் குறித்து புகார் அளிக்கலாம்


பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான இணைய வழி குற்றங்கள் குறித்து புகார் அளிக்கலாம்
x

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான இணைய வழி குற்றங்கள் குறித்து புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அரியலூர்

இணைய வழி பயன்பாடு வேகமாக அதிகரித்து வரும் தற்போதைய சூழலில் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இணைய வழி குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. இணைய வழி குற்றங்களை ஒருங்கிணைத்து மற்றும் விரிவான முறையில் கையாள்வதற்காகவும், பயனுள்ள வழிமுறையினை வழங்குவதற்காகவும், இந்திய அரசு இணைய வழி குற்ற ஒருங்கிணைப்பு மையம் (I4 சி) என்ற திட்டத்தினை தொடங்கியுள்ளது. இதில் நிர்பயா நிதி திட்டத்தில் National Cyber Crime Reporting Portal என்ற முகப்பில் (www.cybercrime.gov.in) அனைத்து வகையான இணைய வழி குற்றங்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இணைய வழி குற்றங்களை புகார் அளிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இம்முகப்பில் பதிவாகும் அனைத்து தகவல்களும் இணைய வழி மூலமாக சம்பந்தப்பட்ட மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்திற்கு அனுப்பப்படும். இணையவழி குற்றங்கள் தொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள கீழ்க்காணும் சமூக வலைதளங்களை பின்பற்றியும் பயன் பெறலாம். மேலும் டுவிட்டர்-https://twitter.com/Cyberdost, பேஸ்புக்-https://www.facebook.com/CyberDost14C, இன்ஸ்டாகிராம்-https://www.instagram.com/cyberdosti4c, டெலகிராம்-https://t.me/cyberdosti4cஆகிய இணைய வழி பாதுகாப்பு குறித்த வழிவகைகளையும் பரப்பிட பங்களிக்கலாம். கட்டணமில்லா தேசிய உதவி எண்ணான 1930-ல் தெரிவித்து உரிய நிவாரணம் தேடிக்கொள்ளலாம், என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story