வேலு நாச்சியார் பெயரில் பெண் காவலர்கள் பயிற்சி கல்லூரி
சிவகங்கையில் வேலு நாச்சியார் பெயரில் பெண் காவலர்கள் பயிற்சி கல்லூரி அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு, கார்த்தி சிதம்பரம் எம்.பி. கடிதம் அனுப்பியுள்ளார்
காரைக்குடி
சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம், தமிழக உள்துறை செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 8-ந் தேதி முதல்-அமைச்சர் மு,க,ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்த போது, அவரிடம் இந்தியாவில் முதல் சுதந்திர போராட்ட வீராங்கனை வீரமங்கை வேலுநாச்சியாரின் சிறப்பினை போற்றும் வகையில் சிவகங்கையை தலைமையிடமாக கொண்டு வேலு நாச்சியார் பெயரில் பெண் காவலர்கள் பயிற்சி கல்லூரியை தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தேன். அவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதன் அடிப்படையில் உள்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர், காவல்துறை தலைமை இயக்குனர் ஆகியோரிடம் கருத்து கேட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு மீண்டும் அதனை நினைவூட்டி கடிதம் எழுதியுள்ளேன். எனவே எனது கோரிக்கை மீது சிறப்பு கவனம் செலுத்தி விரைவாக வேலுநாச்சியார் பெயரில் பெண் காவலர்கள் பயிற்சி கல்லூரி அமைத்து அவருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.