பெண் காவலர்கள் பயிற்சி நிறைவு விழா
அரக்கோணம் மத்திய தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் பெண் காவலர்கள் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.
அரக்கோணம் மத்திய தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 26 பெண் காவலர்களுக்கு கடந்த 4 மாதங்களாக பயிற்சி அளிக்கப்பட்டன.
தொடர்ந்து பயிற்சி முடித்த 26 பெண் காவலர்களுக்கு பயிற்சி நிறைவு விழா மத்திய தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக அரக்கோணம் மத்திய தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மைய முதல்வரும், டி.ஐ.ஜி.யுமான சாந்திஜி ஜெய்தேவ் கலந்துகொண்டு வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பின்னர், தேர்ச்சி பெற்ற காவலர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பேசினார். தொடர்ந்து அனைத்து பயிற்சியிலும் சிறந்து விளங்கிய காவலர் உமா ரஜ்புத்துக்கு சான்றிதழ், கோப்பை வழங்கினார்.
இதனையடுத்து வீரர்களின் வீர சாகசங்கள் மற்றும் துப்பாக்கி உபகரணங்கள் கையாளுதல் போன்றவை செய்து காண்பித்தனர்.
விழாவில் அணி வகுப்புக்கான சிறப்பு விருந்தினர் பர்மீன்தர் கவுர், அணி வகுப்பு கமாண்டன்ட் யமுனா மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.