பெண்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டம்


பெண்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டம்
x

மண்ணச்சநல்லூரில் பெண்களும், துவாக்குடியில் டாஸ்மாக் சுமைதூக்கும் தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி

மண்ணச்சநல்லூரில் பெண்களும், துவாக்குடியில் டாஸ்மாக் சுமைதூக்கும் தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகை போராட்டம்

மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது பிச்சாண்டார் கோவில் ஊராட்சி. இந்த ஊராட்சியின் சார்பாக 100 நாள் வேலை திட்டத்தில் பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வேலை பார்க்கும் பெண்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. இதை கண்டித்தும், உடனடியாக நிலுவைத் தொகையினை வழங்க வேண்டும், தொடர்ந்து 100 நாள் வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் மண்ணச்சநல்லூர் ஒன்றிய அலுவலகத்தை விவசாய தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து மண்ணச்சநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர்.

சுமை தூக்கும் தொழிலாளர்கள்

திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி அரசு மதுபான கிடங்கு முன்பு சி.ஐ.டி.யு. தொழிற்சங்க சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் கண்ணா தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ரெஜினா தாசன், வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அரசு டாஸ்மாக் சுமைதூக்கும் பணி தொழிலாளர்கள் சங்க கன்வீனர் குணசேகரன், புறநகர் மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், செல்லதுரை ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு இறக்கு கூலியை உயர்த்தி வழங்க வேண்டும். தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


Next Story