திருவெறும்பூர் தாலுகா அலுவலகத்தை பெண்கள் முற்றுகை


திருவெறும்பூர் தாலுகா அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
x

திருவெறும்பூர் தாலுகா அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.

திருச்சி

திருவெறும்பூர் தாலுகா பழங்கனாங்குடி ஊராட்சியை சேர்ந்த பெண்களுக்கு கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவில்லை என தெரிகிறது. இதனால் உரிமைத்தொகை கிடைக்காத பெண்கள் நேற்று காலையில் திருவெறும்பூர் தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர். மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளை தேர்வு செய்யப்பட்டபோது, சரியாக கணக்கு எடுக்கவில்லை. இதன்காரணமாக எங்கள் பெயர்கள் விடுபட்டுள்ளது என கூறி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனையடுத்து திருவெறும்பூர் தாசில்தார் ஜெயப்பிரகாசம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் தங்களது கோரிக்கையை மனுவாக எழுதி கொடுங்கள், மகளிர் உரிமைத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதனையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story