கோவில் திருவிழாவில் பெண்கள் கும்மியாட்டம் ஆடி அசத்தல்
கள்ளிமந்தையம் அருகே கோவில் திருவிழாவில் பெண்கள் கும்மியாட்டம் ஆடி அசத்தினர்.
திண்டுக்கல்
ஒட்டன்சத்திரம் தாலுகா கள்ளிமந்தையம் அருகே குப்பாயிவலசில் பிரசித்தி பெற்ற வேலாத்தாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 8-ம் ஆண்டு அன்னதான திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் பொங்கல் வைத்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதன் பிறகு கொங்கு நாட்டின் பாரம்பரிய வள்ளிக்கும்மியாட்டம் நிகழ்ச்சி நடந்தது. இதில் பம்பை மேளம் முழங்க 80 பெண்கள் மற்றும் சிறுமிகள் 2 மணி நேரம் பாட்டுப்பாடி, அதற்கேற்றாற்போல் வள்ளிக்கும்மியாட்டம் ஆடி அசத்தினர். விழாவில் கள்ளிமந்தையம் மற்றும் சுற்றுப்புற கிராமப்பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து ெகாண்டனர்.
Related Tags :
Next Story