மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருவாரூரில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்
குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா வன்முறை சம்பவத்தின் போது கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு என்பவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அவருடைய குழந்தை மற்றும் குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரின் விடுதலையை ரத்து செய்து, மீண்டும் அவர்களை சிறையில் அடைக்க வலியுறுத்தி திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆா்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. பத்மாவதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தமயேந்தி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் அன்னபாக்கியம், மாவட்டக்குழு உறுப்பினர் தமிழ்செல்வி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுஜாதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story