திருவிழா நடத்துவதில் பிரச்சினைகோவிலை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்செஞ்சி அருகே பரபரப்பு


திருவிழா நடத்துவதில் பிரச்சினைகோவிலை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்செஞ்சி அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 1 May 2023 6:45 PM GMT (Updated: 1 May 2023 6:46 PM GMT)

திருவிழா நடத்துவதில் பிரச்சினை கோவிலை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம்


செஞ்சி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த தையூர் கிராமத்தில் வேம்பியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை மாதம் திருவிழா நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா நடத்துவதில் தற்போதைய ஊராட்சி தலைவர் திருமுருகன் தரப்பிற்கும், முன்னாள் தலைவர் தென்னரசு தரப்பிற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதற்கிடையே திருமுருகன் தரப்பினர் இன்று கூழ் வார்த்தல் திருவிழா நடத்த இருந்தனர். இதற்கு தென்னரசு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த சூழ்நிலையில் நேற்று மாலை திருமுருகன் தரப்பை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் வேம்பியம்மன் கோவிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் இருதரப்பிலும் ஏராளமானவர்கள் திரண்டதால் பதற்றம் ஏற்பட்டது.

இதையடுத்து செஞ்சி தாசில்தார் நெகருன்னிசா, துணை போலீஸ் சூப்பிரண்டு கவினா, இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி ஆகியோர் தையூர் கிராமத்திற்கு சென்று இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் இரு தரப்பினரும் சமாதானம் ஆகவில்லை. பெண்கள் தொடர்ந்து கோவில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


Next Story