2 மகள்களுடன் பெண் தர்ணா போராட்டம்
கோவை கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தனது 2 மகள் களுடன் வந்து தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தனது 2 மகள் களுடன் வந்து தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்ணா போராட்டம்
கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று காலை ஒரு பெண், தனது 2 மகள்களுடன் வந்தார். அவர் அங்குள்ள வளாகத்தில் திடீரென்று தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட் டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதை அறிந்த போலீசார் விரைந்து சென்று அந்த பெண்ணிடம் விசாரித்தனர்.
இதில், அவர் கோவை துடியலூர் பொன்விழா நகரை சேர்ந்த சுபலட்சுமி (வயது 40) என்பது தெரியவந்தது. அவர், போலீசாரிடம் கூறியதாவது:-
எனக்கும், தமிழ்செல்வன் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 2013-ம் ஆண்டு சாலை விபத்தில் எனது கணவர் உயிரிழந்தார்.
இதனால் நான் எனது மகள்களுடன் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எனது உறவினர் வீட்டில் வசித்து வருகிறேன். அங்கு கூலி வேலை செய்து வருகிறேன்.
இடத்துடன் வீடு
எனது கணவர் தமிழ்செல்வனின் உடன்பிறந்த தம்பி இளங்கோவ னும் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். எனது கணவரின் தாயாரின் பெயரில் துடியலூரில் 5 சென்ட் இடத்து டன் கூடிய வீடு உள்ளது.
அந்த வீடு எனது மாமியாரின் பெயரில் இருந்தது. பின்னர் எனது கணவரின் தம்பி இளங்கோவன் பெயருக்கு மாற்றப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
தற்போது எனது மாமியார், கணவர், கணவரின் தம்பி ஆகியோர் இறந்து விட்டனர்.
எனது கணவரின் தம்பி மனைவி அந்த வீட்டை பூட்டி விட்டு நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு சென்று விட்டார். அந்த வீட்டில் யாரும் வசிக்க வில்லை.
பங்கு கொடுக்க வேண்டும்
நான் தற்போது வீடு இன்றி உள்ளேன். எனவே மாமியாரின் பெயரில் இருந்த வீட்டில் எனது கணவருக்கு உரிய பங்கை அவருடைய தம்பியின் மனைவியிடம் கேட்டேன். அதற்கு அவர் என்னை திட்டி, மிரட்டல் விடுக்கிறார்.
எனவே எனது கணவர் சொத்தில் எனக்குரிய பங்கை கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து போலீசார் அந்த பெண்ணிடம், திங்கட்கிழமை நடைபெறும் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளிக்கும்படி கூறினர். அதை ஏற்று அந்த பெண் தனது குழந்தை களுடன் அங்கிருந்து சென்றார்.