இ-சேவை மையத்தில் ரூ.1000 உரிமைத்தொகைக்கு பதிவு செய்ய முடியாமல் பெண்கள் தவிப்பு- விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளதாக காட்டுவதால் குழப்பம்
மகளிர் உரிமைத் தொகைக்கு மீண்டும் பதிவு செய்யும்போது விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளதாக காட்டுவதால் பெண்கள் குழப்பம் அடையும் நிலை உள்ளது.
மானாமதுரை
மகளிர் உரிமைத் தொகைக்கு மீண்டும் பதிவு செய்யும்போது விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளதாக காட்டுவதால் பெண்கள் குழப்பம் அடையும் நிலை உள்ளது.
உரிமைத் தொகை
மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 கிடைக்காதவர்களுக்கு உரிய காரணம் செல்போனில் குறுஞ்செய்தியாக வரும், அதில் இருந்து 30 நாட்களுக்குள் உரிய காரணங்களை தெரிவித்து மேல்முறையீடு செய்து கொள்ளலாம், தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையங்கள் மற்றும் தனியார் கம்ப்யூட்டர் மையங்களில் மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று காலை ஏராளமான பெண்கள் குறுஞ்செய்தியுடன் மானாமதுரை தாலுகா அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.
குறுஞ்செய்தியில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விதிமுறைகளை பூர்த்தி செய்யாத காரணத்தால் தங்களை விண்ணப்பத்தை ஏற்க இயலவில்லை என குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஏமாற்றம்
இ-சேவை மையத்தில் உள்ள அலுவலர்கள் இதனை மேல்முறையீடு செய்ய கணினியில் பதிவு செய்தபோது, உங்கள் மனு பரிசீலனையில் இருப்பதாக தெரிவித்தது.
மீண்டும் பதிவு செய்தபோதும் அதேபோல் காட்டியதால் மேல்முறையீடு மனு செய்ய முடியாமல் பெண்கள் குழப்பம் அடைந்தனர். இதனால் அங்குள்ள அலுவலர்களுக்கும், மீண்டும் மனு செய்ய வந்த பெண்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. பலர் பலமணி நேரம் காத்திருந்தும் இ-சேவை மையத்தில் பதிவு செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை உள்ளது.
எனவே மகளிர் உரிமைத்தொகை குறுஞ்செய்தி, இ-சேவை மையத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.