முளைப்பாரி எடுத்து பெண்கள் ஊர்வலம்


முளைப்பாரி எடுத்து பெண்கள் ஊர்வலம்
x
தினத்தந்தி 7 Oct 2023 12:15 AM IST (Updated: 7 Oct 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சாயல்குடியில் முளைப்பாரி எடுத்து பெண்கள் ஊர்வலமாக சென்றனர்.

ராமநாதபுரம்

சாயல்குடி,

சாயல்குடி வி.வி.ஆர்.நகர் சத்திரிய இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவிலில் வருஷாபிஷேகம் மற்றும் அம்மன் கொடை விழா நடைபெற்றது. விழாவிற்கு கிராமத்தலைவர் விஷ்ணுகாந்த், செயலாளர் சிவஞான குருநாதன், பொருளாளர் ஆறுமுக பெருமாள் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். நிர்வாக குழு உறுப்பினர்கள் சந்திரசேகர், கிருஷ்ணன், காசிராஜா, முருகன், குரு முருகன், ராமகிருஷ்ணன் மற்றும் கிராம மக்கள் முன்னிலை வகித்தனர். கோவிலில் அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. வருஷாபிஷேக விழாவையொட்டி திருவிளக்கு பூஜை, பால்குடம், முளைப்பாரி எடுத்தல், அக்னி சட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

இதற்கான ஏற்பாடுகளை சாயல்குடி வி.வி.ஆர். நகர் சத்திரிய இந்து நாடார் உறவின்முறை நிர்வாகிகள் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story