கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த பெண்கள்


கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த பெண்கள்
x

கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் குவிந்தனர்.

திருச்சி

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த வாரம் திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி விடுமுறை என்பதால் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவில்லை. இதனால் பொதுமக்கள் நேற்று நடைபெற்ற கூட்டத்துக்கு அதிக அளவில் வந்திருந்தனர். குறிப்பாக, மகளிர் உரிமைத்தொகை வராத பெண்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு கும்பல் கும்பலாக வந்திருந்தனர். வழக்கமாக 300 முதல் 400 பேர் வரை மனுகொடுக்க வரும் நிலையில், நேற்று மட்டும் 916 பேர் மனு கொடுத்திருந்தனர். பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டு ரசீது வழங்கப்படும். இதற்காக 18 கணினிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் அரங்குக்கு பின்புறம் வெளியில் வைக்கப்பட்டு இருக்கும். நேற்று காலை கூட்டம் அதிகமாக இருந்த வேளையில் கணினியில் சர்வர்பிரச்சினை காரணமாக மனுக்களை பதிவேற்றம் செய்யமுடியவில்லை. இதனால் அங்கிருந்த ஊழியர்கள் கையால் எழுதி மனு ரசீது கொடுத்தனர். இதன்காரணமாக மனுக்களை பதிவு செய்ய காலதாமதம் ஏற்பட்டது. இதனால் மனு கொடுக்க வந்த பொதுமக்களும், முதியவர்களும் கடும் அவதிக்கு ஆளாகினார்கள்.


Next Story