அம்மியில் மஞ்சள் அரைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பெண்கள்


அம்மியில் மஞ்சள் அரைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பெண்கள்
x
தினத்தந்தி 5 Aug 2023 12:15 AM IST (Updated: 5 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆடி 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி திருஉத்தரகோசமங்கை வராகி அம்மன் கோவிலில் அம்மியில் மஞ்சள் அரைத்து பெண்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். .

ராமநாதபுரம்

ஆடி 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி திருஉத்தரகோசமங்கை வராகி அம்மன் கோவிலில் அம்மியில் மஞ்சள் அரைத்து பெண்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். .

அம்மியில் மஞ்சள் அரைத்தனர்

திருஉத்தரகோசமங்கை கிராமத்தில் ஊருணி கரையில் அமைந்துள்ளது சுயம்பு வராகி அம்மன் கோவில். இக்கோவிலில் ஆடி 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று காலை வராகிஅம்மனுக்கு பால், பன்னீர், திரவியம், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வராகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை, பூஜைகளும் நடைபெற்றன. இதையொட்டி கோவிலில் தரிசனம் செய்ய தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.

இவ்வாறு வந்த பெரும்பாலான பெண் பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறுவதற்காக கோவிலின் முன்பு அம்மி கல்லில் மஞ்சள் அரைத்து அந்த மஞ்சளை அபிஷேகத்திற்காக வராகி அம்மனுக்கு கொடுத்து தரிசனம் செய்தனர்.

நேர்த்திக்கடன் செலுத்திய பெண்கள்

மேலும் கோவிலின் உள்பகுதி பிரகாரத்திலும் ஏராளமான பெண் பக்தர்கள் தேங்காயில் தீப விளக்குகள் ஏற்றியும், மாவிளக்கில் தீப விளக்குகள் ஏற்றியும் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். இதேபோல் ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் சாலையில் உள்ள நம்பு நாயகி அம்மன் கோவிலிலும் ஆடி 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி அம்மனுக்கு பல்வேறு அபிஷேகம், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.

அங்கும் ஏராளமான பெண் பக்தர்கள் அம்மியில் மஞ்சள் அரைத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.


Next Story