வீர தீர செயல்கள் செய்த பெண்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்; செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்


வீர தீர செயல்கள் செய்த பெண்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்; செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்
x

வீர தீர செயல்கள் செய்த பெண்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு,

வீர தீர செயல்கள்

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்கு சிறப்பாக பங்காற்றும் 13 வயதுக்கு மேல் 18 வயதுக்குட்பட்ட தமிழகத்தில் வசிக்கும் பெண் குழந்தைகளுக்கு தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24-ல் மாநில அரசின் விருதுக்கான காசோலை ரூ.1 லட்சம் மற்றும் பாராட்டு பத்திரம் வழங்கப்பட உள்ளது.

மேற்படி விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான தனித்துவமான சாதனை செய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் போன்றவற்றுக்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வு ஏற்படுத்தியிருத்தல், ஆண்கள் மட்டும் சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் போன்ற அம்சங்களில் வீர தீர செயல் புரிந்திருக்க வேண்டும்.

விருதை பெற...

மேற்காணும் விருதை பெற குழந்தையின் பெயர், தாய், தந்தை முகவரி, ஆதார் எண், புகைப்படம் போன்றவற்றுடன், குழந்தை ஆற்றிய அசாதாரண வீர தீர செயல் மற்றும் சாதனைகள் போன்றவற்றை ஒரு பக்கத்திற்கு மிகாத குறிப்பு மற்றும் அதற்கான ஆதாரங்கள் இணைத்து உரிய முன்மொழிவுகளை 25.11.2022 மாலை 5.45 க்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், சி.ஆர்.சி. குறுவள மையக் கட்டிடம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகம், ஆலப்பாக்கம், செங்கல்பட்டு என்ற முகவரியில் நேரில் சமர்பிக்கலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story