ஆட்டோவில் அழைத்துச்சென்று மூதாட்டியிடம் நகை பறித்த பெண்கள்
ஆட்டோவில் அழைத்துச்சென்று மூதாட்டியிடம் பெண்கள் நகையை பறித்து சென்றனர்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் தன்யா நகர் காளையார்குறிச்சி தெருவை சேர்ந்தவர் முத்தம்மாள் (வயது 76). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்று மாத்திரைகள் வாங்கி விட்டு வீட்டிற்கு செல்வதற்காக ஒரு ஆலயம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ஆட்டோவில் வந்த 3 பெண்கள் எங்கே போக வேண்டும் என்று கேட்டு, ஆட்டோவில் ஏறுங்கள் என்று கூறி ஏற்றிச்சென்று தன்யா நகர் ஆர்ச் அருகே இறக்கி விட்டுள்ளனர். ஆட்டோவை விட்டு இறங்கியவுடன் கழுத்தை பார்த்த போது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை காணவில்லை. இதுகுறித்து முத்தம்மாள் அளித்த புகாரின் பேரில், நகை பறித்த பெண்கள் தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story