கோவிலுக்கு பூஜை தட்டுகளை சுமந்து சென்று பெண்கள் வழிபாடு


கோவிலுக்கு பூஜை தட்டுகளை சுமந்து சென்று பெண்கள் வழிபாடு
x

கோவிலுக்கு பூஜை தட்டுகளை சுமந்து சென்று பெண்கள் வழிபாடு செய்தனர்.

திருச்சி

மணப்பாறை :

மணப்பாறையை அடுத்த செவலூர், கரும்புலிப்பட்டி, கலிங்கபட்டி, குமரப்பட்டி, மகாளிப்பட்டி ஆகிய 5 கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் ஒன்று கூடி ஒரே நேரத்தில் பூஜை பொருட்கள் மற்றும் பழங்கள் அடங்கிய தட்டுடன் ஊர்வலமாக ஆண்டவர் கோவிலுக்கு சென்று, வழிபடுவது வழக்கம். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக இந்த நிகழ்வு நடைபெறவில்லை. ஆனால் இந்த ஆண்டு அந்த நிகழ்ச்சியை நடத்திட முடிவு செய்த 5 கிராம மக்கள், நேற்று இரவு, தங்களின் ஊர்களில் இருந்து ஆண்டவர் கோவில் நோக்கி புறப்பட்டனர். இதில் ஏராளமான பெண்கள் பூஜைக்கான பொருட்களை தட்டு மற்றும் கூடையில் வைத்து தலையில் சுமந்து கொண்டு தாரை, தப்பட்டை முழங்க இளைஞர்களின் ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வலமாக சென்றனர். நல்லாண்டவர் கோவிலை சென்றடைந்ததும் அங்கு பெண்கள் கொண்டு வந்திருந்த பூஜை பொருட்களை வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து 5 கிராம மக்களும் மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.


Next Story