பெண்ணின் 8 பவுன் தாலி சங்கிலி மாயம்


பெண்ணின் 8 பவுன் தாலி சங்கிலி மாயம்
x
தினத்தந்தி 7 July 2023 12:15 AM IST (Updated: 7 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணின் 8 பவுன் தாலி சங்கிலி மாயம் ஆனது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் பட்டணம்காத்தான் ஆசிரியர்காலணி பகுதியை சேர்ந்தவர் முரளிமோகன் மனைவி கீதா (வயது 44). இவர் தனது மகளை பார்ப்பதற்காக கீழக்கரையில் இருந்து ராமநாதபுரம் வந்து டவுன்பஸ்சில் ஏறி பட்டணம்காத்தான் சென்றுள்ளார். கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு பகுதியில் இறங்கி பார்த்தபோது அவர் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்க தாலி சங்கிலியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story