மகளிர் தின விழா


மகளிர் தின விழா
x

மகளிர் தினவிழா சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யாபவன் கேந்திரா வளாகத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

செங்கல்பட்டு

பழைய மாமல்லபுரம் சாலை பையனூரில் உள்ள விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம், அறுபடை வீடு தொழில்நுட்ப கல்லூரி சார்பில் மகளிர் தினவிழா சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யாபவன் கேந்திரா வளாகத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவுக்கு விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தர் கணேசன், இயக்குநர் அனுராதா கணேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். டாக்டர் கிரி ரங்கசாமி வரவேற்றார். தலைமை சிறப்பு விருந்தினராக டாக்டர். எஸ்.அனி கிரேஷ் கலைமதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஜெ. சுரேஷ் சாமுவேல் மற்றும் பலர் சிறப்புரையாற்றினர். அதனை தொடர்ந்து செய்தி மடல் வெளியிடப்பட்டது. கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயக்குனர் டாக்டர். நசீமா மற்றும் சுகாசினி ஆகியோர் விருது பெறும் பெண் சாதனையாளர்களை அறிமுகம் செய்து வைத்தனர். சிறந்த மகளிருக்கான விருதுகள் சாரதா ரமணி, கற்பகம் மாயவன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. மேலும் விநாயகா மிஷன்ஸ் பல்கலைகழகத்தின் மருத்துவ கல்லூரியில் பணிபுரியும் டாக்டர் ரீனா ஜான், டாக்டர் புஷ்பா கல்லூரியின் முதல்வர் சாரதா ரமேஷ் மற்றும் முனைவர் ஜெனிபர் ஆகியோருக்கு அவர்களது சேவையை பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டன. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் துணை முதல்வர் டாக்டர் சங்கீதா நன்றி கூறினார்.

1 More update

Next Story